நாகர்கோவில், மே 28: முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 61வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலையில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள விஜய் வசந்த் எம்.பி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் நவீன்குமார் கலந்து கொண்டு நேருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சிவபிரபு உட்பட நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், துணை அமைப்பு தலைவர்கள் மற்றும் துணை அமைப்பு நிர்வாகிகள், வார்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.