கடலூர் மாநகராட்சியில் குப்பைகள் சேகரிக்க ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட 130 வாகனங்களில் 60 வாகனங்கள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் மாயமான வாகனங்களை ஒப்படைக்க ஒப்பந்ததாருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. 45 வார்டுகள் கொண்ட கடலூர் மாநகராட்சியில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்ற புகார்களை தொடர்ந்து ஆய்வு செய்ததில் 60 வாகனங்கள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது.