சென்னை: ஒரே நேரத்தில் 60,000 பேர் விண்ணப்பித்ததால் அரசுப்போக்குவரத்துக்கழக இணையதளம் முடக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அரசுப்போக்குவரத்துக்கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்ப பதிவு பிற்பகல் 1 மணிக்கு தொடங்கியது, விண்ணப்ப பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் முடங்கியது.