கரூர், செப். 2: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டீ கடைகளில் கலப்பட டீ தூள் பயன்படுத்தப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாநகராட்சியில் கொசுவலை, பஸ்பாடி மற்றும் ஜவுளி நிறுவனங்கள் என மூன்று முக்கிய தொழில்களை உள்ளடக்கிய மாநகரமாக உள்ளது. இந்த தொழில்களில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதுபோன்ற தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களை மையப்படுத்தி கரூர் மாநகராட்சி பகுதியில் நூற்றுக்கணக்கான டீக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த டீ கடைகளில் தரமற்ற கலப்பட டீ துள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக, பொதுமக்கள் புகார் ெதரிவித்து வருகின்றனர். இதனால், சிறுவர்கள், முதியோர் குடல்பாதிப்பு ஏற்படும். எனவே, தரமான டீ தூளைப் பயன்படுத்தவும், சுகாதாரமாக பராமரிக்க உணவுப் பாதுகாப்புத் துறையினர் அடிக்கடி உரிய முறையில் ஆய்வை மேற்கொண்டு, ஆலோசனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.