வேதாரண்யம், செப்.3: வேதாரண்யம் தாலுக்கா தென்னடார் ஊராட்சியில் கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 600 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதடம் முருகையன் தலைமை வகித்து தென்னங்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவி செந்தில் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி அலுவலர் தமிழன்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணகி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்புவேலன் மற்றும் திமுக கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 600 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
கொள்ளிடம் பகுதி விவசாயிகள்