சேந்தமங்கலம், ஜூன் 4: சேந்தமங்கலம் பேரூராட்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி 102வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். நகர திமுக செயலாளர் தனபாலன் முன்னிலை வகித்தார். விழாவில் மாவட்ட திமுக துணை செயலாளர் பொன்னுசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு, சின்னதேர்நிலை அருகே கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, திமுக கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர், குறவர் காலனியில் 60 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ இலவசமாக அரிசியை வழங்கினார். எம்ஜிஆர் சிலை அருகே, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு பால், ரொட்டி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பேரூர் செயலாளர் முருகேசன், பேரூராட்சி துணைத்தலைவர் ரகுராஜா, தொகுதி ஐடி அணி ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன், மாவட்ட துணை செயலாளர் ராணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் பெரியசாமி, பேரூர் துணை செயலாளர் தவமணி, பிரபின், கவின், முகமது ரபீக், உதயசூரியன், சின்னதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
60 குடும்பங்களுக்கு இலவச அரிசி
0
previous post