சென்னை: சென்னையில் கொளத்தூர், ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 திட்டப் புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.5.22 கோடியில் அயனாவரம் சலவைக் கூடம், நியாயவிலைக் கடைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். கொளத்தூர் புதிய வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 4 முடிவுற்ற பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.