கிருஷ்ணகிரி, ஜூலை 1: கிருஷ்ணகிரி நகராட்சியில் இருந்து 6 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் தினந்தோறும் தூய்மை பணியாளர்கள் மூலம் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளிலிருந்து திடக்கழிவு மேலாண்மை விதியின் கீழ் தரம் பிரிக்கப்பட்டு, உரம் தயாரிக்கப்படுகிறது. இதில் உபயோகமற்ற அல்லது மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகளை, நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு உத்தரவின் பேரில், நேற்று சுமார் 6 மெட்ரிக் டன் அளவிலான உபயோகமற்ற பிளாஸ்டிக் கழிவுகளை அரியலூர் டால்மியா சிமெண்ட் ஆலைக்கு எரிபொருளாக லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
6 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு சென்றது
0
previous post