சின்னமனூர், மே 20: தேனி மாவட்டம், சின்னமனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலாண்டி, எஸ்.ஐ இளையராஜா மற்றும் போலீசார் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பகுதியில் வாகனச் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக டூவீலரில் ஒரு மூட்டையை வைத்துக் கொண்டு 2 பேர் வந்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை நிறுத்தி மூட்டையை சோதனை செய்தனர். அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் தேவாரம் அருகே உள் மூனாண்டிபட்டியைச் சேர்ந்த அய்யப்பன் (57), சின்னமனூர் ராதாகிருஷ்ணன் ரைஸ்மில் தெருவை சேர்ந்த அழகர்ராஜா(32) என்பதும், திருச்சி துறையூரைச் சேர்ந்த திவாகரன் என்பவரிடம் மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து தேனி மாவட்ட பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள திருச்சியை சேர்ந்த திவாகரனை தேடி வருகின்றனர்.