கோவை, ஏப்.10: கோவை டவுன்ஹால் மணிமேகலை வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (48). மீனவரான இவர் டவுன்ஹாலில் தனது பைக்கை நிறுத்திவிட்டு கிரிக்கெட் பார்க்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. நீலிகோணம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). இவர் தனது பைக்கை கோவை அரசு மருத்துவமனை முன் நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்தபோது பைக்கை திருடி சென்று விட்டனர். சாயிபாபா காலனியை ேசர்ந்த ஐடி நிறுவன ஊழியர் பிரின்ஸ் ஜெய்சன் (39), குனியமுத்தூரை சேர்ந்த அகமது (50), பீளமேட்டை சேர்ந்த பழனிசாமி (67) ஆகியோரது பைக், சரவணம்பட்டியை சேர்ந்த லதா (52) என்பவரது மொபட்டும் திருடு போனது. இது குறித்து வாகன உரிமையாளர்கள், ஒரே நாளில் அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.