திருச்சி: பறிமுதல் பணத்தை முறையாக கணக்கு காட்டாத புகாரில் 5 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் குணசேகரன், தலைமை காவலர் சரவணன், காவலர்கள் மூர்த்தி, ரகுபதி, அருள்முருகன் ஆயுதபடைக்கு மாற்றம். 5 போலீசாரை ஆயுதபடைக்கு மாற்றம் செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.