சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. தேவநாதன் பெயரிலான 5 வங்கிக் கணக்குகள், நிதி நிறுவன வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மயிலாப்பூர் நிதி நிறுவனம் மீது 300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததால் பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தலைமறைவாக உள்ள நிதி நிறுவன இயக்குநர்களில் ஒருவரான சாலமனை போலீசார் தேடி வருகின்றனர்.