புதுடெல்லி: 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள், இணைப்பொறுப்பாளர்கள் பட்டியலை பாஜ வௌியிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நியமிக்கப்பட்டு உள்ளார். குஜராத் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல், அரியான மாநில பாஜ தலைவர் குல்தீப் பிஷ்னோய் ஆகியோர் இணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ்வை மத்தியபிரதேச தேர்தல் பொறுப்பாளராகவும், ஒன்றிய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் இணைப்பொறுப்பாளராகவும் பாஜ நியமித்து உள்ளது.சட்டீஸ்கர் மாநில தேர்தல் பொறுப்பாளராக ஓம் பிரகாஷ் மாத்தூரும், மன்சுக் மாண்டவியா செய்யப்பட்டு உள்ளனர். தெலங்கானா பொறுப்பாளராக அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரும், தேசிய பொதுசெயலாளர் சுனில் பன்சாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.