சென்னை: மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடி வழக்கு தொடர்பாக தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யபப்ட்டுள்ளது. நிதிநிறுவனத்தின் வங்கிக் கணக்குகளையும் முடக்கம் செய்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மயிலாப்பூர் நிதி நிறுவனத்தின் மீது ஏற்கனவே 144 புகார்கள் வந்த நிலையில் தற்போது மேலும் 300க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளன.