திருப்பூர், ஜூன் 24: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 578 மனுக்களை பொதுமக்கள் கலெக்டா் கிறிஸ்துராஜிடம் கொடுத்தனர்.
மனுவை பெற்ற அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன், திட்ட இயக்குனர் (மகளிர்) சாம் சாந்தகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொ) மகராஜ், (தேர்தல்) ஜெயராமன், தனித்துணை கலெக்டா் (சமுக பாதுகாப்பு திட்டம்) பக்தவச்சலம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கல்பனா, ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.