சென்னை: மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாமன்ற கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி முழுவதும், வாகனங்களில் சென்று கொசு மருந்து அடிக்க ரூ.2.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மண்டலம் 4, 8 ஆகியவற்றில் குப்பை சேகரிக்கும் பணியை தனியாருக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணியை 4 ஆண்டுகள் கண்காணிக்க ரூ.19.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 50 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாமன்ற கூட்டத்தில் 54 தீர்மானங்கள்
previous post