
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 521 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 386 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனைகளில் 3,330 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 140 பேருக்கும், கோவையில் 45 பேருக்கும், கன்னியாகுமரியில் 44, திருச்சியில் 31, திருவள்ளூர் 25, திருப்பூர் 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்து சிகிச்சையில் 57,542 பேர் உள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.