ஆரணி, ஜூன் 17: ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைத்தீர்வு கூட்டம் ஆர்டிஓ நேர்முக உதவியாளர் மனோகரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மண்டல துணை வட்டாட்சியர் விஜயராணி, தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் பவ்யா, பிரசாந்த், அலுவலர் மற்றும் பிறதுறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, ஆர்டிஓ நேர்முக உதவியாளர் மனோகரன் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது, ஆரணி அடுத்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் பழமையான கெங்கையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை புனரமைப்பு செய்ய அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிதி ஒதுக்கிடு செய்து புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. கூட்டத்தில், பட்டா தொடர்பான மனுக்கள், பட்டா ரத்து, கணினி திருத்தம், 35 கிலோ அரிசி வழங்க, வண்டல் மண் எடுக்க அனுமதி, மருத்துவ நிதியுதவி, ஆக்கிரமிப்பு அகற்ற, யுடிஆர் திருத்தம், ஈமச்சடங்கு நிதியுதவி, நலிந்தோர் உதவிதொகை, கிராம நிர்வாக அலுவலர் பணியிட மாற்றம் ரத்து, கிராம கணக்கில் மாற்றம், கல்குவாரி டெண்டர், பத்திரபதிவு ரத்து, இலவச வீடு வழங்ககோரி என 52 கோரிக்கை மனுக்களை நேர்முக உதவியாளர் மனோகரன் பெற்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து, அந்த மனுக்களை சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார். இதில், பிற துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
52 மனுக்களுக்கு உடனடி தீர்வு மக்கள் குறைதீர்வு கூட்டம்
0
previous post