ஊட்டி, ஆக. 7: நீலகிரி மாவட்ட தமிழ் கவிஞர்கள் சங்கம் சார்பில் மாதந்தோறும் ஊட்டியில் கவியரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 514வது மலைச்சாரல் கவியரங்கம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடந்தது. செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். தலைவர் பெள்ளி தலைமை வகித்தார். திரைப்பட இசையமைப்பாளர் கிரண் பங்கேற்றார். கவியரங்கில் கவிஞர்கள் மணி அர்ஜூணன், ஜேபி., மாரிமுத்து, ரமேஷ், மகேந்திரன், சோலூர் கணேசன், ஜனார்த்தனன், நாகராஜ் உள்ளிட்ேடார் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் கவிஞர்கள் கவிதை வாசித்தனர். மேலும், புதிதாக உறுப்பினர்கள் சேர்ப்பது மற்றும் புதிய நூல்கள் வெளியீடுவது என மன்றத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
514வது மலைச்சாரல் கவியரங்கம்
previous post