மேட்டூர், ஜூன் 23: மேட்டூர் அணை பூங்காவிற்கு கடந்த வாரம் 5754 சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். நேற்று சுற்றுலா பயணிகள் வருகை 5101 ஆக குறைந்தது. சுற்றுலா பயணிகள் காவிரியில் நீராடி மகிழ்ந்தனர்.
மேட்டூர் அணை பூங்காவிற்கு சென்று ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். மீன்காட்சி சாலை, மான் பூங்கா, முயல் பண்ணை ஆகியவற்றை பார்த்து மகிழ்ந்தனர். நேற்று பார்வையாளர்கள் கட்டணமாக ரூ.51010 வசூலிக்கப்பட்டது. பார்வையாளர்கள் கொண்டு சென்ற 1,375 கேமரா செல்போன்களுக்கும், 1 கேமராவிற்கும், 1 வீடியோ கேமராவிற்கும் கட்டணமாக ரூ.14,300 வசூலிக்கப்பட்டது.
மேட்டூர் அணையின் வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தை காண 626 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். இதன்மூலம் பார்வையாளர்கள் கட்டணமாக ரூ.6260ம், 288 செல்போன்களுக்கு, ரூ.2880ம்கட்டணமாக வசூலிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மேட்டூர் அணை பூங்காவில் பார்வையாளர்களுக்கும் பார்வையாளர்கள் கொண்டு சென்ற செல்போன்கள் மற்றும் கேமராக்களுக்கு கட்டணமாக ரூ.79,310
வசூலிக்கப்பட்டது.