கவுஹாத்தி: கவுகாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “அசாம் காங்கிரசுக்கு ஆதரவாக 47 நாடுகளை சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமூக ஊடக கணக்குகள் இயக்கப்படுகின்றன. இவை கடந்த ஒரு மாதமாக அசாமில் உள்ள ஒரு குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவரின் பக்கங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றன. இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றிய கருத்துகள், பாலஸ்தீன ஆதரவு கருத்துகள், ஈரான் தொடர்பான பதிவுகள், வங்கதேச ஆலோசகர் முகமது யூனுஸ் தொடர்பான பதிவுகளும் அதிகம் இடம்பெறுகின்றன.
இந்த சமூக ஊடக கணக்குகளில் அதிகளவாக வங்கதேசத்தில் இருந்து 7,000 கணக்குகளும், பாகிஸ்தானில் இருந்து 350ம், சவுதி அரேபியாவில் இருந்து 246 கணக்குகளும், குவைத்திலிருந்து 86ம், ஆப்கானிஸ்தானில் இருந்து 35 கணக்குகளும் இயக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தேசிய பாதுகாப்பு குறித்த விவகாரம் என்பதால் இதுபற்றி ஒன்றிய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.