இம்பால்: மணிப்பூரில் நடக்கும் வன்முறையால் குகி சமூகத்தை சேர்ந்த 5,000 பேர் தற்போது அண்டை மாநிலமான நாகாலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களால், அம்மாநிலத்தில் வசிக்கும் ஏராளமான மக்கள் வெவ்வேறு மாநிலங்கள், நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருவது அதிகரித்துள்ளது. தங்களது வீடுகளை விட்டு அவர்கள் வெளியேறி வருவதால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது குகி சமூகத்தைச் சேர்ந்த 5,000 பேர், மணிப்பூரில் இருந்து அண்டை மாநிலமான நாகாலாந்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இருப்பினும், அவர்களுக்கான தேவையான அடிப்படை வசிதிகள் மற்றும் நிவாரண முகாம்கள் எதுவும் அமைத்து தரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நாகாலாந்திற்கு இடம்பெயர்ந்த மூன்று குழந்தைகளின் இளம் தாயான நெங்பி கூறுகையில், ‘வன்முறையில் நடந்த வன்முறை சம்பவங்கள் இன்னும் என்னை பயமுறுத்துகின்றன. குற்றவாளிகளை போலீஸ் தடுக்கவில்லை. வீடுகளுக்கு தீ வைப்பதை நிறுத்துமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் மீது எவ்வித குறைந்தபட்ச பிரயோகமும் செய்யவில்லை. இனிமேல் மணிப்பூர் திரும்பி சென்று அமைதியாக வாழ்வோம் என்ற நம்பிக்கையில்லை’ என்று கவலையுடன் கூறினார்.