புதுடெல்லி: நாடு முழுவதும் புதியதாக 5,000 குழந்தைகள் காப்பகங்கள் கொண்டு வரப்படும் என்று ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்று பேசுகையில், ‘பெண்கள் வீடு மற்றும் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேலையில் ஈடுபடுவதற்கு பொருளாதார அர்த்தமுள்ள போட்டி வாய்ப்புகளை நிறுவனங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். அடுத்த வாரத்திற்குள் நகர மையங்களில் 5,000 குழந்தைகள் காப்பகங்களை ஒன்றிய அரசு தொடங்கும்’ என்று கூறினார்.