ஊத்தங்கரை, பிப்.15: ஊத்தங்கரை அடுத்த பேயனூர் கிராமத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 50 பேர், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்றம்பட்டி குமரேசன் முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திர பாண்டியன், லிங்கா ஸ்டில்ஸ் கார்த்திக், திமுக நிர்வாகி பூபதி ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி மோகன், கிருஷ்ணமூர்த்தி, சுதாகர், மாணவரணி ராஜ்குமார், விளையாட்டு மேம்பாட்டு அணி மகாராஜன், நெசவாளரணி சிவக்குமார், அயலக அணி கார்த்தி, ஒன்றிய இலக்கிய அணி சிதம்பரம், தகவல் தொழில்நுட்ப அணி திருமலை, சூரியபிரகாஷ், சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேயனூர் விஜி செய்திருந்தார்.
50 பேர் திமுகவில் இணைந்தனர்
0
previous post