ஹரித்துவார்: பிரச்சனைகளை தீர்க்க 5 நாள் அவகாசம் தருமாறு மல்யுத்த வீரர்களிடம் விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயத் வேண்டுகோள் விடுத்துள்ளார். மல்யுத்த வீரர்களிடம் இருந்து பதக்கங்களை வாங்கிக் கொண்டு விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயத் உறுதி அளித்தார். மல்யுத்த வீரர்களிடம் இருந்து பதக்கங்களை வாங்கி பத்திரப்படுத்த நரேஷ் திகாயத் பேச்சுவார்த்தை நடத்தினார். மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தை வடமாநில விவசாய சங்க தலைவர்கள் தடுத்து நிறுத்தினர். விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் தலைமையில் நிர்வாகிகள் பலர் வீரர்களை சமாதானப்படுத்த ஹரித்துவார் வந்துள்ளனர்.