வேலூர் : வேலூர் ஆப்காவில் 5 மாநிலங்களை சேர்ந்த 31 சிறைத்துைற அதிகாரிகளுக்கு 5 நாள் சிறப்பு பயிற்சி நேற்று தொடங்கியது. வேலூர் ஆப்காவில் சிைறத்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. வரும் 25ம் தேதி வரையில் பயிற்சி நடைபெற உள்ளது. ஆப்கா இயக்குனர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். விஐடி பேராசிரியர் ரமேஷ்பாபு, ஆப்கா பேராசிரியர்கள் மதன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை இயக்குனர் பாஸ்கர் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக விஐடி பல்கலைக்கழக பி பள்ளி முதல்வர் கோபால் பங்கேற்று பேசினார். பயிற்சியில் சிறைத்துறை கண்காணிப்பில் ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் சிசிடிவிகளை பயன்படுத்துதல், ஆர்எப்ஐடி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கைதிகளை கண்காணிப்பு மற்றும் சிசிடிவிகளை பயன்படுத்துதல், தரவு பகுப்பாய்வு, இணையபாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிதிக்கல்வி உள்ளிட்ட அனைத்து வகையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக, கேரளா, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த 3 உளவியல் நிபுணர்கள் உட்பட 31 சிறைத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். பயிற்சி தொடக்க விழாவின் முடிவில் பயிற்சி மலர் வெளியிடப்பட்டது. பேராசிரியர் பியூலா இமானுேவல் நன்றி கூறினார்.