Tuesday, February 27, 2024
Home » 5 மாடியில் புதிய கலெக்டர் அலுவலகம்

5 மாடியில் புதிய கலெக்டர் அலுவலகம்

by Suresh

தர்மபுரி, டிச.25: தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, ₹36.62 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 5 மாடியில், புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது தரைதளம் முடிந்து, 2வது மாடி கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ர்மபுரி மாவட்டம், சேலம் மாவட்டத்தில் இருந்து 1965ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பிரிந்து தனி மாவட்டமாக உதயமானது. அதன் பின்னர், நிர்வாக காரணங்கள், அதிகமான கிராமங்கள் மற்றும் பரந்து விரிந்த பகுதி காரணமாக, கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி, தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது. சேலத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் தனியாக பிரித்த பின்னர், 1967ம் ஆண்டு கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு, அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் திறந்து வைத்தார். தர்மபுரியின் முதல் கலெக்டராக திருமால் பணியாற்றினார். இதுவரை 45க்கும் மேற்பட்ட கலெக்டர்கள் பணியாற்றி உள்ளனர். தற்போதைய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு 56 ஆண்டுகள் ஆகிறது.

மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தகுந்தாற்போல், பணிகள் இடம் விஸ்தரிப்பும், இடம் தேவைகளும் அதிகரித்துள்ளது. தற்போதைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இதுவும் போதுமானதாக இல்லை. சில அரசு துறைகள் வாடகை கட்டிடங்களில் இன்னும் வெளியில் இயங்கி வருகின்றன. இதனால் அரசுக்கு செலவு சுமையாக உள்ளது. அரசு அலுவலகங்கள் அரசு கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய கலெக்டர் அலுவலக வளாகத்தில், 34 துறைகள் இயங்கி வருகின்றன. இக்கட்டிடத்தில் இடம் இல்லாமல், தனித்தனியாக ஆங்காங்கே அரசு துறைகள் இயங்கி வருகின்றன. இதை தவிர்க்க ஒருகுடைக்குள் அனைத்து அரசு துறைகளும் கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது புதியதாக கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு, சுற்றுலா ஓய்வு மாளிகை பின்புறத்தில், பழைய ஆர்டிஓ ஆபீஸ் மைதானத்தில் 3 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

அந்த இடத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன் கட்டுமான பணியை, அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். தற்போது ₹36.62 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 5 மாடியில், புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. தரைதளம் மற்றும் முதல் மாடி முடித்து, 2வது மாடி கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பணிகள் நடக்கும் இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி- சேலம் மெயின்ரோட்டில் கலெக்டர் அலுவலகம் 56 ஆண்டுகளாக ஒரே கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் முக்கிய அரசு துறைகள் இயங்க போதி இடவசதி இல்லை. இதையடுத்து அனைத்து முக்கிய துறைகளும், ஒரே கட்டிடத்தில் இயங்க, புதிய கலெக்டர் அலுவலகத்தின் முதன்மை கட்டிடம் ₹36.62 கோடியில் தரை தளம் மற்றும் 5 மாடியில் கட்டப்பட்டு வருகிறது. தரைதளம் மற்றும் முதல் மாடி முடித்து, 2வது மாடி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது,’ என்றனர்.

You may also like

Leave a Comment

eight + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi