கோபி: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வன பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு வந்த வேளையில்,பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளையினர் அத்தி மரம், வேங்கை மரம், ஈட்டி மரம், கான்ட்ரிக் மரம், ஆலமரம், இலைப்பொருசு மரம், ஆச்சை போன்ற மரங்களின் விதைகளை ஒத்தகுதிரையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கினர்.அதைத்தொடர்ந்து மாணவிகள் குழுவாக இணைந்து 5 மணி நேரத்தில் 20 ஆயிரம் விதை பந்துகளை தயார் செய்தனர்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பவானி எம்எல்ஏ கே.சி.கருப்பணன் விதை பந்துகளை ஆர்வமுடன் தயார் செய்த மாணவிகளை பாராட்டினார். பின்னர் விதை பந்துகளை பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் நந்தகுமார் மற்றும் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி சேர்மன் வெங்கடாசலம், அறங்காவலர் கவியரசு, பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர்.தங்கவேல், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மோகனசுந்தரம், துறைத்தலைவர் முனைவர்.பாரதி, என்எஸ்எஸ்திட்ட அலுவலர் ராக்கிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….