குடியாத்தம், ஜூலை 4: குடியாத்தம் அருகே 5 தலைமுறைகளை கண்ட 110 வயது மூதாட்டி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள். அவர் 5 தலைமுறைகளை கண்டு தனது சுமார் 110 வது வயதில் நேற்று இயற்கை மரணம் அடைந்துள்ளார். இவருக்கு செல்வம், மணி, சக்கரபாணி என 3 மகன்களும், பேபி, ஜெயந்தி, ருக்மணி என 3 மகள்களும் பேரன்- பேத்திகள், கொள்ளு பேரன்- கொள்ளுப் பேத்திகள், எள்ளு பேரன்- எள்ளு பேத்திகள் என 65 பேர் கொண்ட 5வது தலைமுறையை கண்டவர். முனியம்மாள் 110வது வயது வரை ஆரோக்கியமுடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.
5 தலைமுறைகளை கண்ட 110 வயது மூதாட்டி மரணம் குடியாத்தம் அருகே
0