கோவை,ஏப்.4:கோவையில் கஞ்சா விற்பனையை தடுக்க மாநகர போலீசில் தனிப்படை அமைக்கப்பட்டது. துணை கமிஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் பல்வேறு பகுதியில் சோதனை செய்தனர். போத்தனூர் பகுதியில் நடந்த சோதனையில் கஞ்சா விற்ற முருகேஷ் (54), முத்து (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர் கஞ்சா விற்க பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் கஞ்சாவை ஒடிசா மாநிலத்திலிருந்து ரயில் மூலம் கோவைக்கு கடத்தி வந்து சில்லறையாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் இவர்களுடன் வேறு யாரும் தொடர்பில் உள்ளனரா என்ற நோக்கத்தில் மற்ற நபர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரை, அரவேனு பகுதிகளில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வேட்பாளர் ஆ.ராசா பேசுகையில், ‘‘மோடி தனக்கு குடும்பம் இல்லை என்று சொல்லுகிறார். ஆனால் அவருக்கு குடும்பம் உண்டு. நான் சொல்கிறேன். அவருக்கு 3 மகன்கள் உள்ளனர். ஒன்று ஈடி, இரண்டாவது சிபிஐ, மூன்றாவது வருமான வரித்துறை. இந்த 3 மகன்களை வைத்து மாநிலங்களை ஆளும் முதல்வர்களின் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைத்து பாஜவோடு இணையுமாறு மிரட்டி வருகிறார்’’ என கடுமையாக தாக்கி பேசினார்.