ஓசூர், ஜூன் 7: புதிய மாணவர் சேர்க்கையில் பேடரப்பள்ளி அரசுப்பள்ளி சாதனை படைத்துள்ளது. ஓசூர் மாநகராட்சி 3வது வார்டுக்குட்பட்ட பேடரப்பள்ளியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கடந்த ஆண்டு ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை 895 மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. இதில் 114 மாணவர்கள் எட்டாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்புக்கு அருகில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டில் 200 மாணவர்களை புதியதாக பள்ளியில் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 2ம் தேதி பள்ளி திறக்கப்பட்டு அன்று 781 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகளை பிரகாஷ் எம்எல்ஏ வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் தீவிர முயற்சியால் பள்ளி திறந்து 5வது நாளன்று புதிய மாணவர்கள் சேர்க்கை 108 ஆக எட்டியது. இதில் 1ம் வகுப்புக்கு 43 பேர், 2ம் வகுப்புக்கு 12 பேர், 6ம் வகுப்புக்கு 27 பேர் மற்றும் இதர வகுப்புகளுக்கு 26 பேர் புதிதாக இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் பொன்.நாகேஷ் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புக்கு சேர்ந்துள்ள 55 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் எப்சி ஜாய்ஸ்மேரி மற்றும் அபிராமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
5வது நாளே சதம் அடித்த பேடராப்பள்ளி அரசு பள்ளி
0
previous post