இடைப்பாடி, ஜூலை 5: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டி -நெரிஞ்சிப்பேட்டை கதவணை வழியாக தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதையடுத்து, சேலம்- ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 5வது நாளாக நேற்றும் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கதவணை பாலம் வழியாக 3 கிமீ., சுற்றி நடந்தும், டூவீலர்களில் சென்று வருகின்றனர்.
5வது நாளாக விசைப்படகு சேவை நிறுத்தம்
0
previous post