கோவை, ஆக.25: கோவை வடவள்ளி சோமையம்பாளையம் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் சுசிலா (39). கூலி தொழிலாளி. இவரது அண்ணன் இறந்துவிட்டார். இவரின் 10 வயதான மகனை சுசீலா வளர்த்து வருகிறார். சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு அருகே இருக்கும் ஹாஸ்டலில் தங்கி சிறுவன் படித்து வந்தார். விடுமுறை நாட்களில் அத்தை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். சம்பவத்தன்று ஹாஸ்டலில் இருந்து சைக்கிளில் அத்தை வீட்டுக்கு செல்வதாக கூறி சிறுவன் சென்றார்.
சுசிலா வெளியே சென்று இருந்ததால் வீடு பூட்டி இருந்தது. வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த சுசிலாவிடம் அண்ணன் மகன் வந்து சென்றதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து ஹாஸ்டலுக்கு போனில் அழைத்து சுசீலா தகவல் கேட்டபோது ஹாஸ்டலுக்கு சிறுவன் வரவில்லை என்று தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த சுசீலா தனது அண்ணன் மகனை பல்வேறு இடத்தில் தேடி பார்த்து கிடைக்காத காரணத்தினால் வடவள்ளி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.