Tuesday, February 27, 2024
Home » 4 ஆண்டில் ரூ.40 லட்சம் சொத்து சேர்த்ததாக சேலம் மாநகராட்சி அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு: வங்கி லாக்கரை திறக்க நடவடிக்கை

4 ஆண்டில் ரூ.40 லட்சம் சொத்து சேர்த்ததாக சேலம் மாநகராட்சி அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு: வங்கி லாக்கரை திறக்க நடவடிக்கை

by Arun Kumar

சேலம்: சேலம் மாநகராட்சி உதவி வருவாய் அதிகாரி 4 ஆண்டில் ரூ.40 லட்சம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.சேலம் மாவட்டம் தாரமங்கலம் கே.ஆர்.தோப்பூரைச்சேர்ந்தவர் தமிழ்மணி. இவர் சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் உதவி வருவாய் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது. இதையடுத்து உதவி வருவாய் அலுவலர் தமிழ்மணி, அவரது மனைவி ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதில் அவர் வருமானத்திற்கு அதிகமாக 480 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்திருப்பது தெரிய வந்தது. 4 ஆண்டில் மட்டும் ரூ.40 லட்சத்திற்கு சொத்து சேர்த்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கே.ஆர்.தோப்பூரில் உள்ள வீட்டிற்கு சென்றனர். அவரது 2 அடுக்கு மாடி வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் வங்கி லாக்கர் சாவி ஒன்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்து சென்றனர். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வங்கி லாக்கரை திறந்து சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். சேலம் மாநகராட்சி அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

1 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi