காங்டாக்: மேற்கு வங்க மாநிலத்தின் பின்னாகுரியில் இருந்து ராணுவ வீரர்கள் சிக்கிம் மாநிலத்தின் பாக்யோங் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். ரெனாக்- ரோங்லி நெடுஞ்சாலையில் வெர்டிக்கில் பீர் என்ற இடத்தில் கார் சென்றபோது சாலையை விட்டு விலகி காட்டுப்பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த சுபேதார் தங்கபாண்டி, மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த பிரதீப் படேல், இம்பாலை சேர்ந்த பீட்டர், அரியானாவை சேர்ந்த நாயக் குர்சேவ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.