வின்டர்: அமெரிக்காவில் உயர்நிலை பள்ளியில் மாணவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு ஆசிரியர் உட்பட 9 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் நேற்று 14வயது மாணவன் ஒருவன் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினான். இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் இரண்டு பேர் மாணவர்கள் மற்றும் இருவர் ஆசிரியர்கள். மேலும் 8 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய மாணவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.