சென்னை: சென்னை மாநகராட்சியில் தொடர் புகார்களுக்கு உள்ளான 4 கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நகராட்சி நிர்வாகத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தொடர் புகார்களுக்கு உள்ளான 3 திமுக கவுன்சிலர்கள், ஒரு அதிமுக கவுன்சிலர் என 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திட்டப்பணிகளில் அலட்சியம் காட்டிய, அத்துமீறிய கவுன்சிலர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. திமுக கவுன்சிலர்கள் தி.கார்த்திகேயன், வ.பாபு, க.ஏகாம்பரம், அதிமுக கவுன்சிலர் டி.சி.கோவிந்தசாமி ஆகிய 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.