சென்னை: கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26 கல்வியாண்டில் 4 புதிய கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு 11 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சி மாவட்டம் துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்படும். உளுந்தூர்பேட்டை, செங்கம் ஆகிய இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்படும்.
தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
0