சென்னை: கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக 472 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் ஒப்படைத்தது. கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு 632 ஏக்கர் தேவை என விமான போக்குவரத்து ஆணையம் கேட்டிருந்த நிலையில், நிலம் ஒப்படைப்பு. எந்தவித நிபந்தனையும் இன்றி 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் நிலத்தை தமிழ்நாடு அரசு ஒப்படைத்துள்ளது.