விருதுநகர், செப்.14: விருதுநகரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 458 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நேற்று முன்தினம் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வுக்கு காரணமாக உள்ள ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். மறியலில் ஈடுபட்ட கட்சியின் மாவட்ட செயலாளர் லிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் உட்பட 458 பேர் மீது விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.