கரூர், நவ. 12: மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு குறைந்தளாவே மனு கொடுக்க மக்கள் வந்திருந்தனர்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும். இந்நாளில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்து மனு அளித்து சென்று வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. வழக்கமாக, அதிகளவு குறைதீர் நாள் கூட்டத்திற்கு பொதுமக்கள் வந்து சென்றனர்.
இந்நிலையில், கடந்த 2 வாரமாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. மேலும், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு, தொடர் விடுமுறை விடப்பட்டு பிறகு நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் நேற்று நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்திற்கு மக்கள் வரத்து குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக பரபரப்புடன் காணப்படும் கலெக்டர் அலுவலகம் மக்கள் வரத்தின்றி வெறிச்சோடியே காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.