சேலம், ஆக 21: சேலம் சிறுமலர் பள்ளியில் நடந்த விழாவில், 406 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை டி.எம்.செல்வகணபதி எம்பி., எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர். சேலம் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடப்பாண்டு பிளஸ் 1 படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று சேலம் 4 ரோட்டில் செயல்பட்டு வரும் சிறுமலர் பள்ளியில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் செபஸ்தியான் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கிறிஸ்துராஜா முன்னிலை வகித்தார். இதில், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்பி, சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கி தொடங்கி வைத்தனர். விழாவில் பள்ளியில் நடப்பாண்டு பிளஸ் 1 படித்து வரும் 406 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. முடிவில் உடற்கல்வி இயக்குநர் ராபர்ட் நன்றி தெரிவித்தார்.
406 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
previous post