சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள நாடார்பேட்டை பகுதியில் இரும்பு பட்டறை நடத்தி வருபவர் சேகர். பல்வேறு கோயில்களுக்கு நேர்த்திக்கடன் அரிவாள்களை, கலைநயத்துடன் பாரம்பரிய முறையில் செய்து தருகிறார். இவரிடம் ஜெயங்கொண்ட நிலை கிராமத்தை சேர்ந்த பக்தர்கள், மதுரை அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக 18 அடி நீளமுள்ள 2 அரிவாள்களை செய்ய ஆர்டர் வழங்கினர்.
இதையடுத்து சுமார் 400 கிலோ எடையுடன் ஒரு வார கால உழைப்பில், 2 பிரம்மாண்ட அரிவாள்கள் தயாரிக்கப்பட்டு, அதற்கு வண்ணம் பூசி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து ஆர்டர் கொடுத்தவர்களிடம் நேற்று முன்தினம் அரிவாள்கள் ஒப்படைக்கப்பட்டன. தயாரித்த அரிவாள்களை பக்தர்களிடம் வழங்கும் வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.