Saturday, September 7, 2024
Home » மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கருகிய 4 ஆயிரம் கோழி குஞ்சுகள்

மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கருகிய 4 ஆயிரம் கோழி குஞ்சுகள்

by Karthik Yash

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மின்கசிவு காரணமாக கோழி பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 ஆயிரம் கோழி குஞ்சுகள் கருகி நாசமானது. காஞ்சிபுரம் அடுத்த விஷார் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம் (42). விவசாயியான இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். கோழி பண்ணையில் 10 நாட்களேயான சுமார் 4 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வைத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கோழி பண்ணை அருகில் இருந்த மின் கம்பத்தில் கம்பிகள் உரசியாதால் தீப்பொறி ஏற்பட்டு கோழி பண்ணையின் கூரை மீதும் அங்கிருந்த பிளாஸ்டிக் பைகள் மீதும் தீப்பொறி விழுந்துள்ளது.

இதனை கவனித்த விநாயகமும், அவரது குடும்பத்தினரும் தீப்பொறியினால் ஏற்பட்ட தீயை தண்ணீரை ஊற்றி அணைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இருப்பினும் மீண்டும் மின் கம்பி உரசி கோழிப்பண்ணையின் கூரை மீது தீப்பொறி விழுந்து தீ மள மளவென பரவியது. இதனைகண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்ற நிலையில், சுமார் 50 கோழிக்குஞ்சுகளை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. இதனிடையே, தீ விபத்து குறித்து காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கோழி பண்ணையில் பற்றி எரிந்த தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர்.

இருப்பினும் கோழி பண்ணையின் கூரைகள் முற்றிலும் மளமளவென எரிந்து விழுந்ததில் பண்ணையில் இருந்த 4 ஆயிரம் கோழி குஞ்சுகளும் தீயில் எரிந்து கரிக்கட்டையாகி நாசமானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார், தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தில் உயிரிழந்த கோழிக்குஞ்சுகளை பார்த்து விவசாயி விநாயகம் குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் காண்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

You may also like

Leave a Comment

nineteen − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi