டெல்லி: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,369ஆக நிர்ணயம் செய்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று காலை 11 மணியளவில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், நாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்தும், சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கிய கொள்கை முடிவுகள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்த்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,369ஆக நிர்ணயம் செய்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சோளத்துக்கான [ஹைபிரிட்] குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.3,699ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேழ்வரகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.4,886ஆக நிர்ணயம் செய்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திராவில் ரூ.3,653 கோடியில் 4 வழிச்சாலை அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.