திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.நேற்று முன்தினம் 56 ஆயிரத்து 978 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 19 ஆயிரத்து 617 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. இதில், ரூ.4.87 கோடி கிடைத்தது.நேற்று காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் 6 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.