சென்னை: சாலிகிராமம் புஷ்பா காலனியில் பிரபல நடிகை சீதா (56) வசித்து வருகிறார். இவரது வீட்டில் இருந்த 4.5 பவுன் நகை திடீரென மாயமானது. இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார், வீட்டு வேலைக்கார பெண்களான சவுந்தரி மற்றும் சந்தியாவை பலமுறை விசாரணைக்கு அழைத்து நேரில் வராததால், நகை திருடியது தொடர்பாக போலீசார் 2 வேலைக்கார பெண்கள் மீது நேற்று முன்தினம் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் பார்த்திபன் தனது அலுவலகத்தில் இருந்து 12 பவுன் மாயமானதாக புகார் அளித்திருந்த நிலையில், முன்னாள் மனைவியும் நடிகையுமான சீதா நகை மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.