நெல்லை, ஆக. 31: கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (31). இவரது மனைவி அபிஷா (22). இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். தர்மராஜிக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டவே குழந்தை செய்வதறியாமல் கதறி அழுதுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ், தனது மகனை சரமாரியாக தாக்கினார். இதில் குழந்தைக்கு காயமடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார் வழக்கு பதிந்து குழந்தையை தாக்கிய தர்மராஜை நேற்று முன்தினம் கைது செய்தனர்.