காரைக்குடி, ஆக. 4: புதுவயல் உமையாள் நகரை சேர்ந்தவர் பிரபு மகள் விஜய (4). இவர் தனது பாட்டி பாக்கியத்துடன் அருகில் உள்ள கோயில் திருவிழாவில் நடந்த அன்னதானத்திற்கு நேற்று சென்றுள்ளார். அங்கிருந்து கிளம்பிய இருவரும் சாக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது, புதுவயலைச் சேர்ந்த வெள்ளையன் மகன் கணேசன் (53), என்பவர் ஓட்டி வந்த கார், சிறுமி மீது மோதியது. இதில், படுகடுகாயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார். பாக்கியம் லேசான காயத்துடன் தப்பினார். சாக்கோட்டை போலீசார் கணேசன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
4 வயது சிறுமி விபத்தில் பலி
previous post