சிவகங்கை, பிப். 25: திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் கடந்த மாதம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பிள்ளையார்பட்டியை சேர்ந்த கற்பகமூர்த்தி (37), காரைக்குடி அருகே சாக்கோட்டை போலீஸ் ஸ்டேசனில் கடந்த மாதம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட கரூர் மாவட்டம், வெங்கன்மேடு பகுதியைச் சேர்ந்த சிபு (எ) கவின் (20), தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் கடந்த மாதம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட காரைக்குடி வைரவபுரத்தை சேர்ந்த பாண்டி(38), கடந்த மாதம் டாஸ்மாக் கடையில் பொருட்களை சேதப்படுத்தி பள்ளத்தூர் போலீஸ் ஸ்டேசனில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட பள்ளத்தூரை சேர்ந்த ராஜேஷ்பாண்டி (24) ஆகிய 4 பேரையும் மீதும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஆஷாஅஜித்திற்கு சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆசிஷ்ராவத் பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.